×

"ஜெயலலிதாவை நான்தான் கொன்றுவிட்டதாக கதை கட்டி விட்டாங்க"- சசிகலா

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் இன்று மாலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாள் விழாவில் சசிகலா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன்பின் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ண கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாகவும் சசிகலா கூறினார். 

நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, “அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியை தொடங்குகிறேன். 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததுபோல் இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது. அம்மாவுடன் கூட இருந்து நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்த ஆள் நான். 72 நாள் மருத்துவமனையில் இருந்தோம். நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு அழைத்து வர தயாராக இருந்தோம். யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென அட்டாக் வந்துவிட்டது. ஆனால் வெளியில் உள்ளவர்கள் என்னென்ன கதை எல்லாம் கட்டினார்கள். நான்தான் கொன்று விட்டதாக பேசினார்கள். ஜெயலலிதா படத்தின்முன் அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் சத்தியம் வாங்கினேன். சத்தியம் வாங்கியபின் ஈபிஎஸ்-ஐ முதல்வராக்க கடிதம் கொடுத்தேன். கட்சி என்னவானாலும் பரவாயில்லை என தன்னை பற்றி மட்டுமே நினைத்தார் எடப்பாடி பழனிசாமி