×

சசிகலா விடுதலை : நடைமுறைகள் என்னென்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. இவருடன் இவரது உறவினர்கள் சுதாகர் மற்றும் இளவரசி ஆகியோரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் இவர்களுக்கு விதிக்கப்பட்ட நிலையில் சிறைவாசம் முடிந்து சசிகலா இன்று விடுதலை ஆகிறார். இவருக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி ஏற்கனவே நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு விட்டது. இதனிடையே சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்
 

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. இவருடன் இவரது உறவினர்கள் சுதாகர் மற்றும் இளவரசி ஆகியோரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் 10 கோடி அபராதம் இவர்களுக்கு விதிக்கப்பட்ட நிலையில் சிறைவாசம் முடிந்து சசிகலா இன்று விடுதலை ஆகிறார். இவருக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி ஏற்கனவே நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு விட்டது.

இதனிடையே சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது . இதையடுத்து சசிகலாவுக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.தற்போது சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளதாகவும் மருத்துவ நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு மருத்துவமனையில் இருந்து சசிகலா நேரடியாக விடுதலை செய்யப்படவுள்ளார். 8.30மணிக்கு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு அதிகாரிகள் செல்லவுள்ளனர். 9.30 மணிக்கு -10.30 மணிவரையில் சசிகலா விடுதலை தொடர்பான ஆவணங்கள், சான்றிதழ்களில் கையெழுத்து பெறப்படுகிறது.

இதையடுத்து கையெழுத்திட்ட ஆவணங்கள் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின், சிறைத்துறை விதிகளின்படி மருத்துவமனையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் அங்கேயே சிறைக்கு பெறுவார் என்று கூறப்படுகிறது.