×

“பலவீனங்களை எல்லாம் பலமாக்கி முதல்வராவார் சசிகலா”

தமிழ் எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பல பரிமாணங்களுக்கு சொந்தக்காரர் வலம்புரி ஜான். இவரை எதிர்காலத்தை கணிக்கும் வார்த்தைச் சித்தர் என்றும் கூறுவார்கள். அப்படிப்பட்ட வலம்புரி ஜான் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் ஜெயலலிதா , சசிகலா குறித்து தொடர் ஒன்றை எழுதினார். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், “ஜெயலலிதா முதல்வராக இருந்தாலும் சசிகலா, நடராஜன் என்கின்ற இரண்டு கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய அடிமைப் பெண்
 

தமிழ் எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் என பல பரிமாணங்களுக்கு சொந்தக்காரர் வலம்புரி ஜான். இவரை எதிர்காலத்தை கணிக்கும் வார்த்தைச் சித்தர் என்றும் கூறுவார்கள். அப்படிப்பட்ட வலம்புரி ஜான் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் ஜெயலலிதா , சசிகலா குறித்து தொடர் ஒன்றை எழுதினார். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில், “ஜெயலலிதா முதல்வராக இருந்தாலும் சசிகலா, நடராஜன் என்கின்ற இரண்டு கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய அடிமைப் பெண் தான். ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட அவரை சேர விடாமல் தடுத்தது இந்த இருவர்தான். கொள்ளையடிக்க தங்களுக்கு தடங்கலாக இருந்த அனைவரையும் ஜெயலலிதாவின் பார்வையில் படாதவாறு அடித்து துரத்தியவர்களும் இவர்கள் தான்.

ஜெயலலிதா தூக்கி வளர்த்த மாதவன் நாயரை தவறாக சித்தரித்து அவர் வங்கி கணக்கில் 35 ஆயிரம் ரூபாய் இருப்பதாக கூறி ஓரங்கட்டியதும் இவர்கள்தான். தன் சொந்த பந்தங்களை மட்டுமே வாழ வைக்கலாம் என்று நினைத்து இவர்கள் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களை பக்கத்தில் அண்டவிடாமல் பார்த்துக் கொண்டனர்.

சசிகலா, எம்ஜிஆர் ஆளும் அல்ல; ஜெயலலிதாவின் ஆளும் அல்ல; சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு ஒருநாள் கட்டாயமாக உணரும். ஆனால் அப்போது கூட ஜெயலலிதா உணர மாட்டார்.ஒரு நடிகையாக இருந்து அரசியல் வாழ்வில் இணைந்து தமிழகத்தின் முதல்வர் ஆனதையே நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா ஒரு திறமையான நிர்வாகி, படிப்பாளி ,பெறும் தலைவர்களுடன் அவர் போராளி என்ற இடத்திற்கு வந்தார். ஒருநாள் சசிகலாவும் முதல்வராவார். நான் சொல்வதை கேட்டு நீங்கள் என்னை பைத்தியக்காரன் என்று நினைக்கலாம்; பலவீனங்களை எல்லாம் பலமாக்கிக் கொண்டு ஜெயலலிதா முதல்வரானது போல் அவருடைய நிழலான சசிகலாவும் ஒருநாள் முதல்வராவார். அப்போது என்னை தமிழர்கள் நினைத்துப் பார்ப்பார்கள் “என்று கூறியிருக்கிறார். அதேபோல் ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக சசிகலா குடும்பமே மாறியுள்ளது 1980-களிலேயே தொடங்கிவிட்டது என்று வலம்புரி ஜான் தெரிவித்துள்ளார்.