☰
×

அஇபுதமமுக-வில் இருந்து சசிகலா நீக்கம்!

 

அஇபுதமமுக-வில் இருந்து சசிகலா நீக்கம்!அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி அதன் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, "அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் நேரத்தில் எங்களை பகடைக் காயாகப் பயன்படுத்திக்கொண்டார். அவரால் கட்சியில் எந்த செயல்பாடும் இல்லை. தேர்தல் முடிந்த பின் கட்சிப் பணிகளில் சசிகலா ஈடுபடவில்லை. அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. கட்சித் தொண்டர்களையும் வேட்பாளர்களையும் அவர் சந்திக்கவில்லை. இதனால், கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்துள்ளோம். இதனால், சசிகலா பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2027 பிப்ரவரி மாதம் வெளியிடப்படும்" என்றார்.