முன்னாள் டிஜிபி விஜயகுமார் IPS தாயார் மறைவு - சசிகலா இரங்கல்
Jun 26, 2023, 14:13 IST
முன்னாள் டிஜிபி விஜயகுமார் IPS தாயார் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் டிஜிபி திரு.விஜயகுமார் IPS அவர்களின் தாயார் கௌசல்யா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஒரு நேர்மையான அதிகாரியை நாட்டுக்காக அர்ப்பணித்த இந்த ஒப்பற்ற அம்மையாரின் இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது.
திரு.விஜயகுமார் அவர்கள் மிகவும் நேர்மையானவர், பணிகளை நேர்த்தியாக செய்யக்கூடியவர் என்பதை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லிகொண்டே இருப்பார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பை பெற்ற அதிகாரிகளில் ஒருவராக விளங்கியவர் திரு.விஜயகுமார் அவர்கள்.