நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு சசிகலா இரங்கல்
Nov 10, 2024, 14:00 IST
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தமிழ் திரையுலகின் பிரபல மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.