×

“நாட்டை குடும்பம்” என பச்சைக் குத்தி இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம்- சரத்குமார்

 

சென்னையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற ரசிகர்களுக்கு, “நாட்டாமை குடும்பம்” என பச்சை குத்திக்கொள்ளுமாறு நடிகர் சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், “எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் பச்சை குத்தும் எண்ணம். 'நாட்டாமை குடும்பம்’ என பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இது நமது குடும்ப அடையாளமாக இருக்கும். “நாட்டாமை குடும்பம்” என பச்சை குத்திக் கொள்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து நேரில் சந்திக்கலாம். என்னை சந்திக்க வருவோருக்கு கிரீன் கார்டு போல, கையில் பச்சைக் குத்து இருந்தால் எளிதில் நேரடியாகவே சந்திக்கலாம். அனைவரும் பச்சை குத்த வேண்டாம், விரும்புபவர்கள் குத்திக்கொள்ளலாம். ஷூட்டிங்கில் இருப்பதால் நான் நாட்டாமை குடும்பம் என பச்சை குத்தவில்லை. ஷூட்டிங் முடிந்த பின் பச்சை குத்திக்கொள்வேன்” என்றார்.