×

10 லட்சம் கோடி கடனை முதலில் எப்படி அடைப்பார் என்பதை விஜய் சொல்லட்டும் - சரத்குமார்

 

தமிழக வெற்றி கழகத்தை அரசியல் கட்சியாகவே நான் எடுத்துக் கொள்ளவில்லை என பாஜக மூத்த தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


பியூஷ் கோயலை இன்று சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் சந்தித்த பின் பாஜக மூத்த தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது பேசிய அவர் , வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய தன்னுடைய கருத்தை தெரிவித்ததாக அவர் கூறினார் மேலும் , சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து மாநில தலைமை முடிவெடுக்க வேண்டும் என்றும்  பாஜகவை சார்ந்த உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது தனது விருப்பமாக உள்ளது என்று அவர் கூறினார். மத்திய அரசின் திட்டங்களை தீவிரமாக மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் தனது பிரச்சாரம் இருக்கும் என்று கூறிய அவர் தமிழக வெற்றி கழகத்தை கட்சியாகவே தான் எடுத்துக் கொள்ளவில்லை என்று  கூறினார். மேலும் தவெக  என்பது ஒரு பெரிய கட்சியே கிடையாது  என்றார்.


தமிழக வெற்றி கழகம் என்டிஏ கூட்டணியில் சேருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் , அவர் தனித்தே போட்டியிடட்டும் என்றும் அவர் மக்களிடம் தனது கருத்துக்களையும் கொள்கைகளையும் கூறி சட்டமன்றத் தேர்தலை சந்திக்கட்டும் எனவும் முதலில் தமிழக அரசுக்கு உள்ள 10 லட்சம் கோடி கடனை எப்படி அடைக்கப் போகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்தட்டும் என்றார்