×

“பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு” - சரத்குமார் பரபரப்பு பேட்டி

 

பாஜகவிடம் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தை கேட்போம் என சரத்குமார் கூறியுள்ளார்.

அரசியல் நிலைப்பாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என நினைக்கிறேன். பாஜகவிடம் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரத்தை கேட்போம். பாஜகவில் எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது ஆதங்கமாக உள்ளது.இதுகுறித்து மாநில தலைவர் நயினார் மற்றும் தேசிய தலைமைக்கு கடிதம் எழுதவுள்ளேன். பாஜகவில் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாதது என்ற அவர்களின் கேள்விக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 30 ஆண்டுகளாக என்னுடன் பயணித்தவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பியூஷ் கோயலிடம் கோரிக்கையை கடிதமாக வழங்குவோம். பியூஷ் கோயல் நிச்சயம் செவி சாய்ப்பார், நல்ல முடிவு வரும். நிச்சயம் கவனிக்கப்படுவோம். பொறுப்பு இருந்தால்தான் கட்சியில் செயல்பட முடியும். ஒரு உறுப்பினராக என்னால் செயல்பட முடியாது. உங்களின் அருமையும், பெருமையும், அறிவும், ஆற்றலும் தெரியவந்த பிறகும் கட்சி பொறுப்பு வழங்காதது ஏன்? என ஆதர்வாளர்கள் என்னிடம் கேட்கின்றனர். திருச்சி பொதுக்கூட்ட மேடையில் உங்கள் ஃபோட்டோ கூட இல்லை என ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டனர்.” என்றார்.