×

சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்

 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் அக்கட்சியின் தலைவர் சரத்குமார்.


இதுதொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன? எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன். இது நம் நாட்டின் எழுச்சியின் தொடக்கம் என்றார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது, சரத்குமாரை தமிழ்நாட்டில் அடைத்து வைக்க பாஜக விரும்பவில்லை என்று கூறினார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார்.