×

“அதிமுகவின் ஆதரவை தவெக பெற்றால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம்”- சண்முகம்

 

அதிமுகவின் ஆதரவை தவெக பெற்றால் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், “குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் கொல்லைப்புறம் வழியே பாஜக ஆளும் சூழலை நிராகரிக்கவே தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளோம். ஆளுநர் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகதான் வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்க்கும் நிலைக்கு தவெக சென்றால், அது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவே இருக்கும். அப்படி நடக்குமானால், தவெக அரசுக்கான ஆதரவு என்ற எங்களது முடிவை மறுபரிசீலனை செய்வோம்” என்றார்.