×

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி போராடிய தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

 

சென்னையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி போராடிய தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

சென்னை பெரியமேட்டில் உழைப்போர் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் , ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தவெக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “முதலமைச்சரை எங்களிடம் பேச சொல்லுங்கள், போராட்டத்தை கைவிடுகிறோம்” என தூய்மைப் பணியாளர்கள் முழக்கமிட்ட நிலையில், காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் , ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்கள் கோரிக்கை தொடர்பாக உழைப்போர் உரிமை இயக்கம் உள்ளிட்ட சங்கங்களுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்களுக்கான கோரிக்கை குறித்து சுமூகமான முடிவுகள் கிடைக்குமா என்று தெரிய வரும்.