×

கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் நடிகையின் பெயரை வெளியிடுவேன்-சங்கீதா 

 

கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் நடிகை பெயரை வெளியிடுவேன் என சங்கீதா கூறியுள்ளார்.

2 ஆண்டுகளாக நடிகர் விஜயும், சங்கீதாவும் பிரிந்து வாழ்வதாக கூறப்படும் நிலையில், விவாகரத்து கேட்டு சங்கீதா மனுதாக்கல் செய்துள்ளார். 1999ஆம் ஆண்டு விஜய்- சங்கீதா  திருமணம் நடைபெற்றது. திருமணமான 27 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து கேட்டு சங்கீதா மனுதாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், “திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் மனைவியான என்னை விஜய் சுதந்திரமாக நடமாடவிடாமல் தடுத்தார். திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் பொருளாதார ரீடியாக எனக்கு விஜய் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். பொது வெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் நடிகை பெயரை வெளியிடுவேன். தேவைபட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2-வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன். அந்த நடிகை பகிர்ந்த புகைப்படங்களால் நானும் எனது குழந்தைகளும் மன ரீதியாக பாதிக்கப்பட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.