×

மணல் கடத்திய அமைச்சர் கேஎன் நேருவின் தீவிர விசுவாசி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக திமுக நிர்வாகியின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முத்தப்புடையான்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஓட்டுநர்கள் மூன்று பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக திமுக நிர்வாகியின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முத்தப்புடையான்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஓட்டுநர்கள் மூன்று பேரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருச்சி மணப்பாறை திமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி உடையது என தெரியவந்துள்ளது. இவர்முதன்மைச் செயலாளர் நேருவின் தீவிர விசுவாசி ஆவார். இவர்மீது மணல் கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஆரோக்கியம் தலைமறைவாகியுள்ளார்.