×

ஓட்டுக்கு ரூ.2,000... செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி! ஓட்டம் பிடித்த எம்.எல்.ஏ

 

சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. லட்சுமணன், தேர்தலுக்கு முன் ஓட்டுக்கு ரூ.2,000 வழங்கியதாக அக்கட்சியின் ஓமலூர் வேட்பாளர் அதியமான் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதுகுறித்து லட்சுமணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது, தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களை அப்புறப்படுத்தினர். 

ஓமலூர் தொகுதி TVK வேட்பாளர் அதியமான் நேற்று "பக்கத்தில் உள்ள
சேலம் மேற்கு தொகுதி முழுவதும் உள்ள 100% வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் கொடுத்தார்" என சொன்னாரே அந்த TVK MLA லட்சுமணன் இவர்தான் 😛😜
pic.twitter.com/zr3sUv55PB

— S.K.Vijayan 🖤❤️ (@SKV_offl) June 5, 2026



சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்ததாக ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் அதியமான் பேசிய வீடியோ வெளியாகி தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ விவகாரம் தொடர்பாக இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனே அவர்களை தவெகவினர் தள்ளிவிட்டு எம்.எல்.ஏவை பேசவிடாமல் காரை எடுக்குமாறு கூறினர். காரின் பின்புற சீட்டில் அமர்ந்திருந்தவர் காரை எடுக்குமாறு ஓட்டுநருக்கு சைகை கொடுத்தார். உடனே காரை எடுத்துக்கொண்டு எம்.எல்.ஏ லட்சுமணன் புறப்பட்டு சென்றுவிட்டார்.ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக செய்தியாளர்களை தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.