×

சேலம் - ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்!

 

சேலத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்த சபீர் என்பவரை அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்ட சபீரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
.