×

கொடூர சம்பவம்! மாடு மேய்க்க சென்ற மூதாட்டி நகைக்காக கொலை!

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாடு மேய்க்க சென்ற மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சின்னேரிகாட்டைச் சேர்ந்தவர் சரஸ்வதி(68). இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வந்தார். வழக்கம் போல் சரஸ்வதி தனது மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், மாலை நீண்ட நேரம் ஆகியும் சரஸ்வதி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்ற்ம் அடைந்த உறவினர்கள் வனப்பகுதிக்கு வந்து தேடிய போது சரஸ்வது சடலமாக கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி திருடப்பட்டிருந்தது. மேலும் அவர் காது மூக்கு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். 
இதனால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனிக்காக அனுப்பி வைத்தனர். சரஸ்வதி கொலை சம்பவம் தொடர்பாக தீவட்டிபட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.