×

சேலம் இரட்டை கொலை - வடமாநில இளைஞர் கைது

 

சேலத்தில் நகைக்காக மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் சவுத்ரி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சேலத்தில் கணவன் மற்றும் மனைவி சேர்ந்து ஒரு மளிகை கடையை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இவர்களது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளை கும்பல் ஒன்று கணவன் மனைவி இருவரையும் கொலை செய்துவிட்டு அவர்கள் அணிருந்திருந்த 10 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார் அந்த கொள்ளை கும்பலை கைது செய்தனர். 

இந்த நிலையில், நகைக்காக மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் சவுத்ரி என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் சவுத்ரி  நகைக்காக இருவரையும் சுத்தியால் 
அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.