×

தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் விற்பனைக்கு!

இதுவரைக்கும் சரவணா ஸ்டோருக்கு சென்று நாம் அனைத்து பொருட்களையும் வாங்கிருக்கலாம். இப்போது சரவணா ஸ்டோரே விற்பனைக்கு வருகிறது. 1970 ஆம் ஆண்டில் ஒற்றைக் கடையாக தொடங்கப்பட்டு பின்னர் சில்லறை விற்பனைக் கடைகளின் சங்கிலித்தொடராக பல கிளைக் கடைகளாக விரிந்த ஒரு நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் (Saravana Stores). தற்போது இது இந்தியாவின் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தமான சில்லறை வணிக சங்கிலித் தொடர் கடைகளாக ஜொலிக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் 1970 செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னை, தி
 

இதுவரைக்கும் சரவணா ஸ்டோருக்கு சென்று நாம் அனைத்து பொருட்களையும் வாங்கிருக்கலாம். இப்போது சரவணா ஸ்டோரே விற்பனைக்கு வருகிறது.

1970 ஆம் ஆண்டில் ஒற்றைக் கடையாக தொடங்கப்பட்டு பின்னர் சில்லறை விற்பனைக் கடைகளின் சங்கிலித்தொடராக பல கிளைக் கடைகளாக விரிந்த ஒரு நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் (Saravana Stores). தற்போது இது இந்தியாவின் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தமான சில்லறை வணிக சங்கிலித் தொடர் கடைகளாக ஜொலிக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் 1970 செப்டம்பர் 4 ஆம் தேதி சென்னை, தி நகரில் ஒரு பாத்திரக் கடையாக மட்டும் துவக்கப்பட்டது. பின்னர் சிறிதுசிறிதாக வளர்ந்து வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்கும் அங்காடியாக 1998 இல் உருவானது.

இந்நிலையில் திநகரில் உள்ள இந்தியன் வங்கி ஒரு நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உஸ்மான் சாலையில் அமைந்துள்ள 4,800 சதுர அடியில் 124 கோடி ரூபாய் மதிப்புள்ள கடையும், திநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் (கோல்டு பேலஸ்) கடையும், 288 கோடியே 8 லட்சத்து 67 ஆயிரத்து 490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மார்ச் 17 ஆம் தேதி ஏலம் நடைபெறும் எனவும் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது