D55 திரைப்படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
Updated: Jan 29, 2026, 19:21 IST
நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் சாய் அபயங்கர்.
அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 55வது படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
null
null
null
null
null
null
null
null
சாய் அபயங்கர் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்களான திப்பு, ஹரிணி ஆகியோரின் மகனாவார். இவர் அண்மையில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர் நடிகர் சூர்யாவின் கருப்பு, நடிகர் கார்த்தியின் மார்ஷல், நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம், மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்சு ஆகிய படங்களுக்கு இசையமைத்துவருகிறார்.