“அத்தனை பேர் ஓட்டு போட்டுள்ளார்கள்! தேர்தலில் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது”- எஸ்.ஏ.சந்திரசேகர்
பெரிய பட்ஜெட் படங்களை வருவாய் பகிர்வு முறையில் தயாரிக்க தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூடியது. இதில் முக்கியமான சில முடிவுகள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மே 2ம் தேதி எந்த திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறாது. நடிகர் சங்கம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும். படத்தின் லாப, நஷ்டத்தில் நடிகர்களும் பங்கெடுக்க வேண்டும். சிறிய பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் உரையாற்றிய எஸ்.ஏ.சந்திரசேகர், “தமிழ்க் குமரன் தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வலுப்பெற்று வருகிறது. தேர்தலில் மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. அத்தனை பேர் ஓட்டு போட்டுள்ளார்கள்” என்றார்.