ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி... தண்டவாளத்தில் குதித்த 4 பேர் ரயில் மோதி பலி..!
மத்திய பிரதேசம், மொரேனா மாவட்டத்தில் ஹேதம்பூர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஏராளமான பயணிகளுடன் வந்த கஜூரஹோ-உதய்பூர் எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது எதிரே மற்றொரு தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்து கொண்டு இருந்தது. கஜூரஹா-உதய்பூர் ரயிலில் தீப்பற்றி எரிவ்தாக திடீரென தகவல் பரவியது.
இதனால் உயிர் பிழைக்க எண்ணிய பயணிகளில் சிலர், ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர். தண்டவாளத்தில் அவர்கள் குதித்த போது, அங்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயணிகள் மீது மோதியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தீ விபத்து பயத்தில் அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய பயணிகள் கீழே இறங்கி அருகில் இருந்த தண்டவாளத்தில் நின்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.