☰
×

சென்னையில் இன்று 7 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு..!

 

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை யொட்டி, நாடு முழுவதும் சீருடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பை, அந்த அமைப்பு நடத்தி வருகிறது ஆர்எஸ்எஸ் அமைப்பு.

தமிழகத்தில், கடந்த 70 ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்து வரும் நிலையில், கடந்த தி.மு.க., ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், உச்ச நீதிமன்றம் வரை சென்று, அனுமதி பெற்று அணிவகுப்பு நடத்தப்பட்டது.இந்த ஆண்டு, ஆர்.எஸ்.எஸ்., 100 ஆண்டுகளை நிறைவு செய்து, 101ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. எனவே, தமிழகம் முழுதும் 128 இடங்களில் அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு த.வெ.க., அரசு அனுமதி மறுக்கவே, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலர் ஜெகதீசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், அக்., 25, நவ., 2ம் தேதிகளில், 128 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்தது.அதன்படி, சென்னை உட்பட பல்வேறு இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு இன்று (அக்டோபர் 25) நடக்கிறது.

சென்னையில் திருவொற்றியூர், கொளத்துார், எழும்பூர், கொரட்டூர், அய்யப்பன்தாங்கல், மேடவாக்கம், குரோம்பேட்டை ஆகிய ஏழு இடங்களில், அணிவகுப்பு நடக்கிறது.எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே, இன்று மாலை 4:00 மணிக்கு தொடங்கும் அணிவகுப்பு, ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவு பெறும்.அங்கு பொதுக்கூட்டம் நடக்கும். கொளத்துார், பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகே, மாலை 3:00 மணிக்கு அணிவகுப்பு தொடங்கும் என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தெரிவித்துள்ளது.