×

ஏப்ரம் 16ம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - 45 இடங்களில் நடத்த அனுமதி

 

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 02ம் தேதி 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முடிவு செய்து இருந்தது. இதற்காக தமிழக காவல்துறையிடம் அனுமதி கோரிய நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீடு செய்த நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளான ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். மேலும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரம் 16ம் தேதி தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்ட 45 இடங்களுக்கும் காவல்துறை அனுமதி வழங்கியது.