×

சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.10 லட்சம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 14,753 ஐ கடந்துள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான்.சென்னையில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த ‘நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டம்’ தொடங்கப்பட்டது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 14,753 ஐ கடந்துள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான்.சென்னையில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த ‘நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டம்’ தொடங்கப்பட்டது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மாஸ்க் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று ஒரு நாள் மட்டும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.10 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனையில் முகக்கவசம் அணியாத 2130 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபராதம் விதித்ததன் மூலம் ரூ.10 லட்சம் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.