×

ரூ. 45,000ஐ நெருங்கும் தங்கம் விலை..  இன்று எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா??

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன்  ரூ.44,720க்கு விற்பனையாகிறது.

உலகளவில் தங்கத்திற்கு எப்போதுமே மவுசுதான் என்றாலும், இந்தியாவில் தங்க வர்த்தகம் முக்கிய இடம் வகிக்கிறது.  குறிப்பாக தென்னிந்தியாவில்  தங்கத்தை அதிகம் வைத்துள்ள மாநிலங்களில் தமிழகமும், கேரளாவும் முன்னிலை வகிக்கிறது.  தங்கத்தை  சிறந்த முதாலீடாக கருதுவதோடு, ஆபத்துக் காலங்களில்  உதவும் காரணியாகவும் கருதுகின்றனர்.  பொருளாதார பாதுகாப்பு அளிப்பதாலும், தங்கத்தின் மீதான முதலீடு லாபம் அளிப்பதாலும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தை அதிகம் நாடுகின்றனர்.

ஆனால் தங்கம் விலையோ நாளுக்கு நாள் அதிகரித்து  பேரதிர்ச்சியை கொடுக்கிறது.  தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,590க்கு விற்பனையாகிறது. இதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 1.30 காசுகள் அதிகரித்து ரூ.77.50க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரன் ரூ. 45 ஆயிரத்தை நெருங்குவதால் இல்லத்தரசிகள், நடுத்தர வர்க்கத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.