“ஏழரை நாட்டுச் சனி நம்மை விட்டு ஓடிப்போயிருச்சு”- ஆர்.எஸ்.பாரதி
ஏழரை நாட்டுச் சனி நம்மை விட்டு ஓடிப்போயிருச்சு. அந்த சனியன்களைச் சுமந்ததால் தான் நாம் கோட்டைக்குப் போக முடியல என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “கடந்த நவம்பரில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கு வாங்குவதற்கு எல்லா வேலையும் செய்துவிட்டு வந்தார். ஆனால், ‘ஆதவ் அர்ஜுனா கம்பெனி’ அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டது. அந்த டெண்டரை செயல்படுத்தியிருந்தால் இந்த 3 மாதத்தில் சென்னையில் மின்தடையே வந்திருக்காது. ஆந்திராவுக்குப் போய் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37-க்கு வாங்குவதன் மூலம் அரசுக்கு லட்சம் கோடி நஷ்டம். மக்கள் இவர்களை தெரிந்துகொண்டு விட்டார்கள். அதை இடைத்தேர்தலில் பார்த்தோம். ஏழரை நாட்டுச் சனி நம்மை விட்டு ஓடிப்போயிருச்சு. அந்த சனியன்களைச் சுமந்ததால் தான் நாம் கோட்டைக்குப் போக முடியல” என்றார்