“இன்னும் 2 முறை சிபிஐ விசாரணைக்கு சென்றால் விஜய் கட்சியை கலைத்துவிடுவார்”- ஆர்.எஸ்.பாரதி
இன்னும் 2 முறை சிபிஐ விசாரணைக்கு சென்றால் கட்சியை கலைத்து விடுவார் என விஜய் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சூசகமான பேசினார்.
கரூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “இந்திப் படங்கள் தமிழகத்தில் ஓடாததற்கு திராவிட இயக்கம்தான் காரணம்.விஜய் சிபிஐ விசாரணைக்கு இன்னும் 2 நாள் சென்றால் கட்சியைத் கலைத்து விடுவார்.மோடி மதுராந்தகத்தில் பேசியபோது, ஸ்டாலினுக்கு 2 முறை வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள் என பேசினார். அது 2026 சட்டசபை தேர்தலை மையப்படுத்தி பேசினார். மக்களவை தேர்தலின்போது 8 முறை மோடி தமிழகம் வந்தார். 39 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது. சட்டசபை தேர்தல் பரப்புரைக்கு 10 முறை வாருங்கள். தமிழகத்தில் 200 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு எல்லா சாத்தியக் கூறுகள் உள்ளன.
SIR-ல் இந்தியாவிலேயே தமிழகத்தில் திமுகவினர்தான் சிறப்பாக பணியாற்றியதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழக அரசு தினம் ஒரு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால் பிப்ரவரி 28 தேதிக்குள் சட்டசபை தேர்தலில் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழகத்தில் 68 ஆயிரம் பூத்துக்கும் பிஎல்ஓக்கள் அமைத்துள்ள கட்சி திமுக மட்டும்தான்” என பேசினார்