×

கூட்டுறவு கடைகளில் தக்காளி கிலோ ரூ.79- தமிழக அரசு

 

கூட்டுறவு கடைகளில் தக்காளி கிலோ 79 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்கறிகள் குறிப்பாக தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான காய்கறிகள் மற்றும் தக்காளி கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. 

கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.85 முதல் 100 ரூபாய் வரை குறைவான விலையில் தரமாக பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் தக்காளி விற்பனை செய்யப்பட்டுவருவதாக தமிழக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, தக்காளில் கிலோ 79 ரூபாய்க்கு உருளைகிழக்கு கிலோ ரூ.38, வெண்டைக்காய் கிலோ ரூ.70 என விற்கப்பட்டுவருகிறது. 

விலை பட்டியல்: