☰
×

தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு ₹70 கோடி ஆஃபர்!" – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு..!
 

 

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கிய நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும். இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுகவும், திமுகவும் கூட்டத்திற்க்காக மட்டுமே பயன்படுத்தியது. அதிமுக, திமுக கூட்டங்களில் கூட்டத்தை காண்பிக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் அழைத்து வரப்பட்டனர்.

இனிமேல் மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிர் மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களை தவறாக பயன்படுத்தினால் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களிடம் புகார் தெரிவிக்கலாம். தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களை திமுகவும், அதிமுகவும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். உட்கட்சியில் எதிர்ப்பு கிளம்பினால் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தலாம்.

திமுகவும், அதிமுகவும் பணம் நிறைய வைத்துள்ளதால் பதவியை பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். முந்தைய ஆட்சி காலங்களில் அரசு பதவிகள் விலை பேசி விற்க்கப்பட்டன. ஒவ்வொரு பதவிக்கும் ஒரு விலை என பணம் வாங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சங்களை தடுக்க சோதனைகள் நடைபெற்று வருகிறது.

த.வெ.க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடந்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க. இணைந்து த.வெ.க ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.70 கோடி வரை ஆபர் கொடுத்தவர்கள் சிக்கி, கைதாகி நிற்கிறார்கள். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி முன்பிருந்தே நடைபெற்று வருகிறது. அது இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதை மறைத்துவிட்டு தான் நாங்கள் ஆட்சிக்க வந்துவிடுவோம், 3 மாதத்தில் வந்துவிடுவோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இது நடக்காது. எங்கள் எம்.எல்.ஏக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு எங்கேயும் நகரமாட்டார்கள். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை தடுக்கும் போது பிரச்சினைகள் வருகிறது. 23 ஆண்டுகாலமாக டாஸ்மாக் துறையில் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் பெறப்படுகிறது. பாட்டிலுக்கு 1 ரூபாய் 50 காசு தொடங்கி 10 ரூபாய் வரை பெறப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.