40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.57 லட்சம் பறிமுதல்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 41 இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து, தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்றது. தூத்துக்குடி, நெல்லை மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகங்களிலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திருப்பத்தூர், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 41 இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.