கடந்த 4 நாட்களில் ₹5,240 உயர்வு! இன்று தங்கம் விலை என்னாச்சு தெரியுமா?
நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், 3.75% முதல் 4% வரையிலேயே வட்டி விகிதத்தை தொடரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை ஏறத் தொடங்கியது. இந்நிலையில், நேற்று வெளியான அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் தங்கம் விலை மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றமின்றி தொடர்கிறது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ரூ.13,385-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் அதேவிலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரமாகவும் தொடர்கிறது. தங்கம் கடந்த 4 நாட்களில் ரூ.5,240 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.