×

ஒரே நாளில் ரூ.5000 குறைந்தது..!!

 
ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை தினத்தன்று, தங்கம் வாங்குவதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதன் மூலம் வீட்டில் செல்வம் சேர்வதுடன், குடும்பத்தினர் கஷ்ட நஷ்டமின்றி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என நம்பப்படுகிறது. நேற்று நகைக்கடைகளில் தங்கம் வாங்க வாடிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதியது.
நேற்று  (ஏப்ரல் 20) திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.1,14,400-க்கு விற்பனை.
அதே போல் கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று (ஏப்.21) ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.14,300க்கும் ஒரு சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.275க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.