×

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை இரண்டு முறை வழங்கியது. அதே போல வேலையில்லாமல் தவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, வியாபாரிகளுக்கும் உதவித்தொகையை வழங்கியது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பு பணியில் தன் உயிரை பொருட்படுத்தாது பணியாற்றும் ஊழியர்கள், உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு பல்வேறு நிதியுதவியும் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. சமீபத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித்தொகை இரண்டு முறை வழங்கியது. அதே போல வேலையில்லாமல் தவிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, வியாபாரிகளுக்கும் உதவித்தொகையை வழங்கியது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பு பணியில் தன் உயிரை பொருட்படுத்தாது பணியாற்றும் ஊழியர்கள், உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் பெரும்பங்கு ஆற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு உதவித் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என நெல்லையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதே போல அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் ரூ.5,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.