“மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்”- குடித்தால் ரூ.5000 அபராதம்
நாகை, விழுந்தமாவடி மீனவ கிராமத்தில் "மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்!" என்ற முழக்கத்துடன் ஊர் பஞ்சாயத்து சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகை, விழுந்தமாவடி மீனவ கிராமத்தில் "மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்!" என்ற முழக்கத்துடன் ஊர் பஞ்சாயத்து சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விழுந்தமாவடி மீனவ கிராமத்தினர் வைத்துள்ள பேனரில், “நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் ரூ.5000/- அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சனைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5000/-அபராதம் வசூலிக்கப்படும். இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தைஉருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.