×

நெல்லையப்பர் கோயிலில் ரூ.5 கட்டணம் ரத்து!

 

நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களின் செல்போன்களுக்கான லாக்கர் கட்டணம் ரூ. 5 வசூலிக்கப்படாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க கோயில் வளாகத்தில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செல்போனை அங்கு ஒப்படைக்க ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை செலுத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், பணமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களின் செல்போன்களுக்கான லாக்கர் கட்டணம் ரூ. 5 வசூலிக்கப்படாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.நெல்லையப்பர் கோயிலில் ரூ.5 கட்டணம் ரத்து!கடந்த 1ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது அது இலவசமாக்கப்பட்டுள்ளது.