முதல்வர் அறை மாற்றத்துக்கு ரூ.5 கோடி- 3 மாதங்களில் முடிக்க உத்தரவு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகள் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படும் நிலையில், இப்பணிகளுக்காக ரூ.5 கோடி மதிப்பிலான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது மாடிக்கு முதல்வர் விஜய் அலுவலக மாற்றப்படவிருக்கிறது. இதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக ஐந்து கோடி செலவில் பொதுப்பணித்துறை சார்பில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவகத்தின் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப்பிரிவு, முதலமைச்சசரின் சமூக ஊடகப்பிரிவு (CMO Social Media). செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இயக்குநர் திரு. அருள், தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு, செய்தித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையைச் சார்ந்த திருவாளர்கள். பாஸ்கரன், இரவிச்சந்திரன், அ. வே. சுரேந்திரன் மற்றும் த. கலைச் செல்வன் ஆகிய அலுவலர்களின் அலுவலகம் மற்றும் எழுதுப்பொருட்கள் அறை அனைத்தும் உடனடியாக, தரைத்தளம் (500 சதுர அடி). இரண்டாம் தளம் (400 சதுர அடி) மற்றும் மூன்றாம் தளம் (2000 சதுர அடி) ஆகியவற்றில் காலியாக உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன.