தமிழ்நாட்டில் ரூ.42.65 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில், இன்று (மார்ச் 18, 2026) வரை கணக்கில் வராத ₹42.65 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் - 2026 தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 மார்ச் 2026 அன்றைய நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு 42.65 கோடி ஆகும். அதன் விவரங்கள் பின்வருமாறு:
• ரொக்கம்: ரூ.2.37 கோடி
• மதுபானம்: ரூ.0.18 கோடி
• போதைப்பொருட்கள்: ரூ.2.88 கோடி
• விலைமதிப்பற்ற உலோகங்கள்: ரூ.16.42 கோடி
• இலவசங்கள் / பிற பொருட்கள்: ரூ.20.80 கோடி
தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.