×

உயிரிழந்த 50 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி!

உடல்நலக்குறைவு மற்றும் விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமுடக்கம் தொடங்கியதில் இருந்து எதிர்பாராத பல விபத்துகளும் உயிரிழப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. சாலை விபத்துகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, பாம்பு கடி என பல காரணங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்து வருகிறார். அதே போல, கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு அரணாக இருந்த முன்களப்பணியாளர்கள் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த
 

உடல்நலக்குறைவு மற்றும் விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுமுடக்கம் தொடங்கியதில் இருந்து எதிர்பாராத பல விபத்துகளும் உயிரிழப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. சாலை விபத்துகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, பாம்பு கடி என பல காரணங்களால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்து வருகிறார். அதே போல, கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு அரணாக இருந்த முன்களப்பணியாளர்கள் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்குமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர், பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.