×

மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.276 கோடி நிவாரணம்!!

 

தமிழ்நாட்டிற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு நிவாரணமாக ரூ.275 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசு ரூ. 5060 கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டிருந்தது. ஆனால் ரூபாய் 450 கோடியை மட்டுமே மத்திய அரசு விடுவித்தது.  வழக்கமாக தமிழகத்திற்கு அளிக்கப்பட வேண்டிய தொகையை தான் வெள்ளம் காரணமாக முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்தது.   தமிழகத்திற்கு மாநில பேரிடர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 450 கோடியை அளிக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்கள்  சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் வெள்ளை பாதிப்பை ஆய்வு மேற்கொண்டனர்.  ஆனால் தமிழ்நாடு அரசோ இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5060 கோடி வழங்க வேண்டும் . புயல் சேதத்தை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.  2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.