நாங்குநேரி அமமுக வேட்பாளர் இசக்கிமுத்து அலுவலகத்தில் ரூ.20 லட்சம் பறிமுதல்
நாங்குநேரி தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி முத்துவின் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வேட்பாளராக களமிறங்கி இருப்பவர் இசக்கிமுத்து என்பவர். இவரது கட்சி அலுவலகம் நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் சீனிவாசன் நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு இசக்கி முத்துவின் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் இருப்பதாக புகார்கள் வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல்துறையினர் கேடிசி நகர் பகுதியில் உள்ள அந்த அலுவலகத்தில் உள்ளே சென்று ஆய்வு செய்திருக்கின்றனர். அப்பொழுது முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.20,29,400 பணம் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் வருமானவரித்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வருமானவரித்துறையினர் அங்கிருந்த பணத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் முறையான ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளனர். முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத சூழ்நிலையால் வருமானவரித்துறையினரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது