மாயமான 7 வயது சிறுமியை கண்டுபிடித்து தருபவருக்கு ரூ. 2 லட்சம் சன்மானம்
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான நிலையில் சிறுமியை கண்டுபிடித்து தருபவருக்கு ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்குவதாக போஸ்டர்களை ஒட்டிய விழுப்புரம் வடமேற்கு மாவட்ட கழக செயலாளர் குண. சரவணன்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. இவருடைய மனைவி பவானி. இந்த தம்பதியினரின் 2-வது மகள் ஹேமாவதி (வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கி இருக்கிறாள். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமாவதியை காணவில்லை. அவளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதுடன், சிறுமியை கண்டுபிடிக்க பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி கடந்த 12-ஆம் தேதி அதிகாலை மாயமான நிலையில் சிறுமியை கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் என விழுப்புரம் வடமேற்கு மாவட்ட கழக செயலாளர் குணா. சரவணன் அறிவித்த நிலையில் தற்போது செஞ்சி முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டு வருகிறது.