அதிமுக நிர்வாகி வீடு மற்றும் நிறுவனங்களில் ரூ.2.85 கோடி பறிமுதல்
Updated: Apr 18, 2024, 10:53 IST
அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ரெடிமிக்ஸ் மற்றும் ஜல்லி, மணல் விற்பனை நிறுவனத்தில் ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பி.எல்.ஆர். புளு மெட்டல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, பல்லவரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி லிங்கராஜ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.