☰
×

200 நாட்களில் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு, 2 லட்சம் வேலைவாய்ப்புகள்: தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்!

 

 தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிக்கை:

200 நாட்களுக்கு முன்பு, ஒரு வாக்குறுதியுடன் நாங்கள் பயணத்தை துவங்கினோம். இன்று, 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு மற்றும் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் என இந்த பயணம் வளர்ந்து நிற்கிறது.இன்று மட்டும் ரூ.58,214 கோடியில் 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன; இதன் மூலம் 65,786 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

இதில் 13 நிறுவனங்கள் முதன்முறையாகத் தமிழகத்திற்கு வருகின்றன, 4 நிறுவனங்கள் முதன்முறையாக இந்தியாவிற்கே வருகின்றன. ரூ.9,355 கோடியில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, 6 திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளன; இவை 21,675 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். முன்னதாக கையெழுத்திடப்பட்ட 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 74.1% ஏற்கனவே செயல்பாட்டிற்கு வந்துவிட்டன.இந்த இலக்கை நிர்ணயித்து, அதை அடைவதற்கான பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்த முதல்வர் விஜய்க்கு நன்றி.எங்களின் இந்த வெற்றிக்கு என்ன ரகசியம் என்று யாராவது கேட்டால், சொல்லிக்கொள்கிறோம்.இதில் எந்த மசாலாவும் இல்லை, அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கும் ஒரு குழு மட்டுமே உள்ளது. தாராளமாக இதைப் பின்பற்றலாம்.

இவ்வாறு கீர்த்தனா கூறியுள்ளார்.