×

#JUSTIN  இந்தியன் ரயில்வேக்கு  கிடைத்த ரூ.1500 கோடி கூடுதல் வருவாய் - காரணம்  தெரியுமா?
 

 

இந்தியன் ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. 60 வயது ஆண்களுக்கு 40 சதவீதம்,  50 வயது பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையை கடந்த 20 ஆண்டுகளாக ரயில்வே துறை வழங்கி  வந்தது.  ஆனால் இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி ஆயிரத்து 100 கோடியாக இருந்தது.  57 சதவீதம் ஒரு  பயணியால் மட்டுமே வருவாய் கிடைக்கும் பட்சத்தில்,  மூத்த குடிமக்கள் சலுகையை கைவிட ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி மூத்த குடிமக்களுக்கு வழங்கிய சலுகைகள் நிறுத்தப்பட்டன. 

இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வேக்கு கூடுதல் வருவாயாக ரூ. 1500 கோடி கிடைத்துள்ளது.   தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வேத்துறை இவ்வாறு பதில் அளித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் . 2020 மார்ச் 20ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் 7.31 கோடி பேர் ரயிலில் பயணம் செய்து உள்ளனர்.  இதில் 4.46 கோடியில் 60 வயது ஆண்களும்,  2.84 கோடியில் 58 வயது பெண்களும்,  8310 திருநங்கைகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.   இந்த இரண்டு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் மூலம் ரயில்வேக்கு 3264 கோடி வருவாய் கிடைத்துள்ளது.  மூத்த  குடிமக்களுக்கானகட்டண சலுகையை ரத்து செய்ததன் மூலமாக ரூ. 1500 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.