×

SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... ATM-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 அபராதம்

 

சாதாரண சேமிப்புக் கணக்கு (BSBD) வைத்திருப்பவர்கள் பணம் எடுப்பதற்கான விதிகளை திருத்தியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி. ஒவ்வொரு மாதமும் ஏடிஎம் உள்ளிட்டவற்றில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத ஸ்டேட் வங்கி, கிளை வழியாகத் திறக்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்குகளுக்கான பணம் எடுக்கும் கட்டணங்களை, 1 அக்டோபர் 2026 முதல் திருத்தியுள்ளது. ஒரு மாதத்தில் நான்கு முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு 15 ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.