×

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று நிதியுதவி வழங்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்!

கொரோனா வைரஸ் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெருமளவு பாதித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, முகவரி மாறி வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஆயிரம்
 

கொரோனா வைரஸ் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெருமளவு பாதித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரசு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, முகவரி மாறி வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஆயிரம் ரூபாய், நிதியுதவி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ஒரு சில மாற்றுத்திறனாளிகள் வேறு இடங்களில் வசிப்பதாகவும் அவர்கள் நிவாரணம் பெறுவதில் சிக்கல் இருப்பதால் மாறி வசிப்பவர்களுக்கும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.