☰
×

தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் ரூ.1,000 அறிவிப்பு..!!

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலைக்கு பதில் பணமாக ரூ.1,000 வரவு வைக்கப்படவுள்ளது. இதற்கு ரூ.13.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 47,180 குடும்ப பங்கீட்டு அட்டைககளில் உள்ள 1,33,890 (60,877 ஆண்கள் மற்றும் 73,013 பெண்கள்) பயனாளிகளுக்கு ரூ.1,000 வீதம் சுமார் 13 கோடி 38 லட்சம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹700 மதிப்புள்ள தீபாவளி தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதுபோல் வேண்டும் என நினைக்கிறீங்களா?