×

ரூ.1000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்தல் : இலங்கையை சேர்ந்த இருவர் கைது!

சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்திய இலங்கையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துாத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பாகிஸ்தானை சேர்ந்த சிலரின் உதவியுடன் கடத்துவதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய ரகசிய கண்காணிப்பில், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி, ‘சேனையா துவா’ மீன்பிடி படகை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். இந்த படகில் சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் அந்த படகில் இருந்து 5 துப்பாக்கிகள், செல்போன்கள்
 

சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்திய இலங்கையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துாத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பாகிஸ்தானை சேர்ந்த சிலரின் உதவியுடன் கடத்துவதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய ரகசிய கண்காணிப்பில், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி, ‘சேனையா துவா’ மீன்பிடி படகை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். இந்த படகில் சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் அந்த படகில் இருந்து 5 துப்பாக்கிகள், செல்போன்கள் உள்ளிட்டவையும் இருப்பது கண்டறியப்பட்டது. மத்திய உளவுத்துறையிடம் சிக்கிய 6 பேரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உதவியுடன் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.

இந்நிலையில் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான இலங்கையைச் சேர்ந்த நிவாஸ், முகமது அப்னாஸ் இருவரும் சென்னை காரப்பாக்கத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இருவரையும் அதிரடியாக கைது செய்தது. ஏற்கனவே பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இவர்களை இலங்கை அரசு அவுட் லுக் நோட்டீஸ் பிறப்பித்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.