×

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி ரூ.10 லட்சம் இழப்பீடு தருவதாக அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள கெங்கவரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (47). கடந்த 25ம் தேதியன்று நிவர் புயல் கரையைக் கடந்த போது, பலத்த காற்று வீசி சரவணன் வீட்டு வாசலில் இருந்த மின்கம்பம் பந்தல் மீது சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சரவணன் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அன்று அவரது
 

செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி ரூ.10 லட்சம் இழப்பீடு தருவதாக அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள கெங்கவரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (47). கடந்த 25ம் தேதியன்று நிவர் புயல் கரையைக் கடந்த போது, பலத்த காற்று வீசி சரவணன் வீட்டு வாசலில் இருந்த மின்கம்பம் பந்தல் மீது சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சரவணன் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அன்று அவரது மகளின் திருமணம் நடக்கவிருந்த நிலையில், சரணவனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சரவணனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.6 லட்சமும் வழங்கப்படும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். நிவர் புயலின் போது உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ஏற்கனவே முதல்வர் பழனிசாமி ரூ.10 லட்சம் இழப்பீடு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.